Valimai Heroine
பிரபல நடிகை பதிவிட்டுள்ள டீவீட்டால் வலிமை பட ஹீரோயின் இவர் தானோ என்ற குழப்பம் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிக்கிறார், யுவன் இசையமைக்கிறார் என்பதை தவிர இந்த படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் பிரசன்னா வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி ட்வீட் ஒன்றின் மூலமாக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளர்.

இந்நேரமும் மும்மையில் நடைபெறும் போலீஸ் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்திருக்க வேண்டும், ஆனால் ஷூட்டிங்கிற்காக சென்னை வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் தீவிரமாக நடந்து வருவதால் இவர் தான் வலிமை நாயகியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எது உண்மை? யார் ஹீரோயின்? யார் வில்லன் என்பதையெல்லாம் படகுக்கு தான் அறிவிக்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.