How Vinoth gets Thala 60 chance | Previously Ajith's 60th film was directed by a different director | Thala Ajith | Ner konda Paarvai

How Vinoth gets Thala 60 chance :

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் வினோத் இன்னொரு கதையும் அஜித்துக்கு ரொம்பவே பிடித்து போக தற்போது அவரையே தன் அடுத்த படத்தின் இயக்குநராக்கி விட்டாராம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

அடித்தது யோகம்.. ஹாலிவுட் ரீமேக்கில் விமல் – ஹீரோயின் யார் தெரியுமா?

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதை தற்போது உறுதி செய்துள்ளனர். முன்னதாக அஜித்தின் 60-வது படத்தை வெறொரு இயக்குநர்தான் இயக்குவதாக இருந்தது.

ஆனால் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் வினோத் இன்னொரு கதையும் அஜித்துக்கு ரொம்பவே பிடித்து போக தற்போது அவரையே தன் அடுத்த படத்தின் இயக்குநராக்கி விட்டாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.