How to Use AC Water : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

How to Use AC Water :

💧 இன்றைய சூழலில் தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பலரும் பலவிதங்களில் மறுசுழற்சி செய்து வருகிறார்கள். ஏசியில் இருந்து வெளியாகும் நீர், பயன்படுத்தலாமா என்ற கேள்வி பலர் இடத்தில் உள்ளது. அவற்றை அறிந்து கொள்வோம்.

💧 மறுசுழற்சி:

அரிசி கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு பாய்ச்சுவது, துணி துவைத்த தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்துவது போன்றவை பலரும் பயன்படுத்தும் மறு சுழற்சி முறையாகும். இதில் ஏசியில் இருந்து வெளியாகும் நீரை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு பயனுள்ள சில வீட்டு மட்டும் ஆரோக்கிய குறிப்புகள். தெரிந்து கொள்வோமா?

💧ஏசியில் நீர் வெளியேறுவது ஏன்?

ஏசியின் செயல்பாட்டால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் நீராக மாறுகிறது. அறையின் காற்றை குளிர்விக்கும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் நீர்த்துளிகள் ஆக மாற்றப்படுகிறது. அதுவே அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது.

எனவே ஒரு ஏசியில் இருந்து நீர் வெளியேறுவது வழக்கமான ஒன்றுதான். திடீரென நீரின் அளவு அதிகரிப்பதும், ஒரு துளி நீரும் வெளி வராமல் இருப்பதும் ஏசி சரியாக இயங்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

💧எப்படி பயன்படுத்தலாம்:

செடிகள் இருக்கும் இடத்திற்கு குழாய் மூலமாக நேரடியாக விடலாம், சேகரித்து வைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

வீட்டிலுள்ள உபயோகப் பொருட்களை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம், சுவர்களை துடைக்கவும், தரையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

💧முக்கிய குறிப்பு:

ஏசியில் இருந்து வெளியாகும் தண்ணீரில் எந்தவித நச்சுப் பொருள்களும் கிடையாது என்றாலும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இதை அருந்த கூடாது. செல்லப்பிராணிகளை குளிப்பாட்டவும் இந்த நீரைப் பயன்படுத்தக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here