How to save kidney | Health Tips | Beauty Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | | Easy To Follow Daily Health Tips

How to save kidney :

தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவரா நீங்கள்?

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிகள் :

☆ உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள்:

☆ சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

☆ சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

☆ பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள்

☆ போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

☆ நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here