how to make Bajra Lassi
how to make Bajra Lassi

தேவையானப்பொருட்கள்:

கம்பு மாவு – ஒரு கப்,
தயிர் – 3 கப்,
இஞ்சி – சிறிய துண்டு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

1) கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

2) பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.

3) கம்பு மாவை தண்ணீர் விட்டு கரைத்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறி வேகவிட வேண்டும்.

4) மாவு நன்கு வெந்த பின் இறக்கி ஆற விட வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர் உப்பு சேர்த்து கலந்து பரிமாறலாம்.