Hospital Statement About Vivek Death

நடிகர் விவேக்கின் மறைவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் தர மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Hospital Statement About Vivek Death : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விவேக். இவர் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடியனாக குணச்சித்திர நடிகராகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். இவர் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். பின்னர் மக்களின் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொண்டாராம் தடுப்பூசி தான் விவேக்கின் மறைவிற்கு காரணமா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மறுநாளே விவேக்கிற்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் தடுப்பு ஊசிக்கும் மாரடைப்பிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.