Hospital Management Statement on SPB Health Status
Hospital Management Statement on SPB Health Status

SPB-ன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Hospital Management Statement on SPB Health Status : இந்திய சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்பி பாலசுப்ரமணியன். கடந்த வாரத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் லேசான அறிகுறியோடு மட்டுமே இருந்த எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சில தினங்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மேலும் அவருக்கு உயிர்காக்கும் உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் இவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ICU-ல் உள்ள SPB-யின் தற்போதைய நிலை என்ன?? குடும்பத்தினர் வெளியிட்ட முக்கிய தகவல்

மேலும் மருத்துவர்கள் பாடகர் எஸ்பிபி பாடிய மெலடி பாடல்களை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க வைத்து அதன் மூலம் SPB அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்ற வகையிலும் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பிரார்த்தத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.