Homemade Beauty Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Homemade Beauty Tips :

# கண்களின் புத்துணர்ச்சியுடன்  அழகாக இருக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
# கண்களையும், கண் நரம்புகளையும் வலுப்படுத்தக் கூடிய பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, பசும்பால், பசு நெய், கேரட், கோழி முட்டை, பப்பாளிப் பழம், நெல்லிக்கனி, இந்துப்பு போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம்.
# கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும்.
# களைப்பாக இருந்தாலோ, தூக்கம் இல்லாத போதோ கண்களைக் கசக்குவது பலரது வழக்கம். இப்படிச் செய்வதன் மூலம் கண்களின் ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்.
# கண்களை மூடிக் கொண்டு, வாயில் நீர் நிரப்பி, கண்களைத் தண்ணீரால் கழுவிவிடுவதால், கண்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும்.
# ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here