Hollywood Actor in Darbar : Rajinikanth | Nayanthara | Yogi Babu | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Hollywood Actor in Darbar :

இப்படத்தில் நடிக்க விரும்புவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டூக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அப்டேட் சொன்னா சந்தோஷப்படுவீங்க – தளபதி 63 பிரபலத்தின் மாஸான டிவீட்!

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விரும்புவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டூக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது இப்படத்தின் இயக்குனர் முருகதாஸுக்கே பேரதிர்ச்சியாய் அமைந்துள்ளது உடனே அவர் அந்தப் டிவீட்டுக்கு “சார் இது உண்மையிலேயே நீங்கள் தானா?” என ஆச்சரியத்துடன் மறு கேள்வி கேட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் பில் டூக், கமாண்டோ, பிரடேட்டர் போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.