Hockey World Cup 2018
Hockey World Cup 2018

Hockey World Cup 2018 – இன்று உலக கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் – கனடா அணிகள் மோதுகின்றது.

அதன் இரண்டாம் ஆட்டத்தில் இந்தியா – தென்னாபிரிக்கா மோதுகின்றனர்.

உலக கோப்பை போட்டியில் கடந்த 1975-ஆம் ஆண்டு அஜீத் பால் சிங் தலைமையில் இந்திய அணி சாம்பியன் ஆனது.

தற்போது 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியனாகும் முனைப்பில் மன்பீர்த் சிங் தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.

மேலும் 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்தியா உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளின் ஆதிக்கத்தை தகர்க்க போராடி வருகிறது.

மேலும் அந்த அணிகள் மட்டுமே கடந்த 40 ஆண்டுகளாக பதக்கங்களை தட்டி செல்கின்றன என்பது குறிப்பிட தக்கது.

உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2010-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா 8-வது இடத்தை பிடித்தது.

மற்றும் நடக்க இருக்கும் போட்டி தொடரில் இந்தியாவின் முதல் இலக்கு அரையிறுதிக்குள் நுழைவதாகும்.

மற்றும் இந்த ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிய இந்தியா, இப்பொழுது நடக்கவிருக்கும் உலக கோப்பை இந்திய அணிக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்குக்கான வாழ்வா-சாவா போட்டி ஆகும்.

எப்படியும், இந்திய அணி வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றும் வீரர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வெற்றி அடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.