Hiphop Aadhi's next film Announced : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

Hiphop Aadhi’s next film Announced : ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெள்ளியான படம் நட்பே துணை. மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றது. தமிழகத்தில் முதல் வாரத்தில் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்தது.

நட்புனா என்னனு தெரியுமா? தளபதி விஜய் சொல்றாரு கேளுங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இதன்மூலம் இந்த ஆண்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்தபடியாக முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பு அந்தஸ்தையும் இப்படம் பெற்றது.

இதையடுத்து ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.

இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஹிப்ஹாப் ஆதியின் முதல் இரண்டு படங்களை தயாரித்த சுந்தர் சி-தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.