ஹிந்தியில் ரீமேக் ஆன நெல்சனின் கோலமாவு கோகிலா படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தில் நயன்தாரா சாதாரண குடும்பப் பெண்ணாக நடித்து அனைவரையும் அசத்தியிருப்பார். இந்தப்படம் முழுவதும் காமெடி மற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கி இருப்பார். 

இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தை ஹிந்தியில் “குட் லக் ஜெர்ரி” என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளனர்.  இப்படத்தை இயக்குனர் சித்தார்த் சென் இயக்கியிருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான நயன்தாராவின் இடத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த் எல் ராயின் கலர் எல்லோ புரோடக்சன்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த “குட் லக் ஜெர்ரி”திரைப்படம் ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்தியில் இப்படம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.