Highlights of Valimai

வலிமை படத்தில் இரண்டு விஷயங்கள் மிகவும் பெரியதும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Highlights of Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டிலை தவிர வேறு எந்த தகவலையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.

இப்படியான நிலையில் தற்போது படத்தில் மிகவும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் 2 விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

அதாவது விசுவாசம் திரைப்படத்தில் மகளை கண்ணே கண்ணான கண்ணே பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதைப் போல வலிமை படத்தில் அம்மாவை பற்றிய பாடல் ஒன்று இடம்பெறும் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தின் சண்டைக்காட்சிகள் முற்றிலும் வித்தியாசமான முறையில் எடுக்கப்படுவதால் இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிய வந்துள்ளது.