Sarkar VS TNSarkar

Sarkar Vs TNSarkar : சர்கார் படத்தில் மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றுடன் சேர்த்து டிவியையும் எரித்து இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமா? என அதிமுகவை விமர்சித்து இருக்கிறது நீதிமன்றம்.

முருகதாஸ் தளபதி விஜயை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கி இருந்த படம் சர்கார்.

இந்த படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி சரத்குமாருக்கு கோமளவல்லி என ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்திருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அதிமுக அரசு இலவசமாக கொடுத்திருந்த மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன.

இதனால் அதிமுக அரசு சர்கார் படத்தை எதிர்த்து வந்தது. பின்னர் இது குறித்த காட்சிகளும் படத்தில் இருந்து இன்று நீக்கப்பட்டு விட்டன.

மேலும் நேற்று இரவு இயக்குனர் முருகதாஸின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்ததால் இன்று நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் படத்தில் மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை எரிப்பதையும் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக பதிலளித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து பேசிய வழக்கை விசாரித்த நீதிபதி சென்சார் முடிந்து வெளியான படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும்.

இதே படத்தில் டிவியையும் தூக்கி வீசி எரித்து இருந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்து இருக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதியாக முருகதாஸை வரும் நவம்பர் 27-ம் தேதி வரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டு இந்த வழக்கை தள்ளி வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here