Heroine Details of Vaadivasal Movie
Heroine Details of Vaadivasal Movie

வாடிவாசல் படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என தெரியவர ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

Heroine Details of Vaadivasal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இல்லை படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் நாயகியாக யார் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் வெற்றிமாறன் ஆண்ட்ரியாவை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சூரரைப்போற்று திரைப்படம் OTT வழியாக வெளியாகப் போகிறது என்ற அறிவிப்பால் அப்செட்டில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் வாடிவாசலில் ஹீரோயின் ஆண்ட்ரியாவா என மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாடிவாசல் திரைப்படத்தில் நாயகிக்கு போல்டான கதாபாத்திரம் என்பதால் அவர் ஆண்ட்ரியாவை தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.