தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Heroine Details About Thalapathy66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தளபதி 66 படத்தில் அடுத்த அப்டேட் குறித்து வெளியான சூப்பர் தகவல் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு.!!

இதனையடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மேலும் இது முழுக்க முழுக்க காதல் கதை 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களைப் போல இருக்கும் என தயாரிப்பாளர் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி யார் என்பது வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தின விருந்தாக வெளியாகும் என தெரியவந்துள்ளது.

தளபதி 66 படத்தில் அடுத்த அப்டேட் குறித்து வெளியான சூப்பர் தகவல் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்பு.!!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ‌