Hero will be like Velaikkaran
Hero will be like Velaikkaran

Hero will be like Velaikkaran – ஹீரோ படம் தனது வேலைக்காரன் பட பாணியில் சமூக பொறுப்பு கொண்ட படமாக இருக்கும் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

ஷங்கரின் அடுத்த பிரம்மாண்டம் – அவரே வெளியிட்ட தகவல்.!

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இப்படம் தனது வேலைக்காரன் பட பாணியில் சமூக பொறுப்பு கொண்ட படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது சிரமமில்லை என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.