தம்பி மற்றும் ஹீரோ படங்களின் 4 நாள் வசூல் நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தியின் நடிப்பில் தம்பி திரைப்படமும் கடந்த வாரம் ஒரே நாளில் மோதி கொண்டன.
இந்த இரண்டு படங்களுமே பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் வசூலிலும் கலக்கி வருகின்றன.
தொடர்ந்து ஹீரோ படம் அதிக வசூலை பெற்று முன்னிலையில் இருக்க தம்பி திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து ஹீரோவை விடாது துரத்தி வருகிறது.
இறுதியில் தம்பி ஹீரோவை மிஞ்சுமா? அல்லது துறைத்தலோடு நின்று விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் 4 நாள் முடிவில் சென்னையில் ஹீரோ ரூ 1.85 கோடி வசூலையும் தம்பி ரூ 1.28 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது.