Hero

Hero Update : SK 15 படத்தின் டைட்டில் ஹீரோ என வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே டைட்டிலில் தான் விஜயும் நடித்து வருகிறார். விஜய் என்றால் தளபதி இல்ல விஜய் தேவரகொண்டா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் Mr. லோக்கல், நேற்று இன்று நாளை இயக்குனர் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

வாவ்.. மா.க.ப-விற்கு இவ்வளவு அழகான மகளும் மகனுமா? – முதல் முறையாக வெளியான புகைப்படங்கள்.!

24 AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கி இருந்தன.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

படத்திற்கு ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க இதே பெயரில் விஜய் தேவரகொண்டாவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 63 இப்படி தான் இருக்க போகுது – விஜயே வெளியிட்ட தகவல்.!

ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ஹீரோ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகிறது.

ஒரே நேரத்தில் படப்பிடிப்புகள் நடக்கும் இரண்டு படங்களுக்கு ஒரே தலைப்பை வைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.