Hero Tamil Review
பி. எஸ் மித்ரன் இயக்கத்தில் KJR ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹீரோ.

படத்தின் கதைக்களம் :

சிவாகரத்திகேயன் சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக வேண்டும் என ஆசைப்படுகிறார், சூப்பர் ஹீரோவா என உலகமே இவரை கொஞ்சம் தள்ளி வைத்து தான் பார்க்கிறது. ஒரு கட்டத்தில் சிவாவின் அப்பா என் கண் முன்னையே வராத என வெறுத்து விடுகிறார்.

அதன் பின்னர் பணத்திற்காக சில பிராடு வேலைகளை செய்கிறார். இது ஒரு புறம் இருக்க அர்ஜுன் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஒன்று சேர்ந்து அவர்களுக்கு அறிவை வளர்ந்து அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறார்.

இந்த பெயிலான மாணவர்களின் கூட்டத்தில் ஒருவர் தான் இவானா. இவர் ஏரோனெக்டிகல் என்ஜினீர் ஆகா வேண்டும் என ஆசைப்படுகிறார். அர்ஜுனுக்கே தெரியாமல் சிவகார்த்திகேயன் இவானாவிற்கு உதவ அவரும் புது கண்டிப்பு ஒன்றை கண்டு பிடிக்கிறார்.

இதனால் கார்ப்பரேட் கம்பெனிகள் அவரை குற்றவாளி என கூற தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடக்கிறது? சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் என்னவெல்லாம் செய்தார் என்பதே கதை சுருக்கம்.

படத்தை பற்றிய அலசல் :

இதுவரை சூப்பர் ஹீரோ படத்தில் நடித்த நடிகர்களுக்கு தோல்வியே மிஞ்சிய நிலையில் சிவகார்த்திகேயன் துணிச்சலாக நடித்து சாதித்துள்ளார்.

அர்ஜுன், சிவகார்த்திகேயனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் வழக்கம் போல மிரட்டியுள்ளார். அவர் பேசும் வசனங்கள் வசனங்கள் அனைத்தும் கிளாப்ஸை அள்ளுகிறது.

இவானா அவருடைய கதாபாத்திரத்தை அழகாக முடித்து கொடுத்துள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லை என்றாலும் நல்ல அறிமுக படமாக இது இருக்கும் என நம்பலாம்.

அபி தியோல் பர்பெக்ட் வில்லனாக நடித்து கொடுத்துள்ளார்.

தொழில் நுட்பம் :

இசை :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி சூப்பர்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு பிரமாதம். ரூபனின் எடிட்டிங் கன கச்சிதம்.

இயக்கம் :

பி. எஸ் மித்ரன் இரும்புத்திரைக்கு பிறகு மீண்டும் ஒரு கருத்து சொல்லும் படமாக ஹீரோவை இயக்கியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சிகளில் மிரட்டியுள்ளார். ஆனால் சூப்பர் ஹீரோ படம் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்கவில்லை.

தம்ப்ஸ் அப் :

1. சிவகார்த்திகேயன், அர்ஜுன் நடிப்பு
2. கிளைமேக்ஸ்
3. படத்தில் சொல்லப்படும் மெசேஜ்
4. வசனங்கள்

தம்ப்ஸ் டவுன் :

1. சூப்பர் ஹீரோ படம்னாலும் ஒரு நியாயம் வேணா என கேட்க தோணும் லாஜிக் மீறல்கள்

REVIEW OVERVIEW
ஹீரோ விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
hero-movie-reviewமொத்தத்தில் சூப்பர் ஹீரோ தமிழ் சினிமாவில் ஜெயிக்கும் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.