முன்னணி நடிகை படத்தில் நடிக்க உள்ளார் குக் வித் கோமாளி கெமி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி நான்கு வருடங்கள் வெற்றிகரமாக இருந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஜட்ஜ் ஆக செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருந்தனர் ஆனால் நிகழ்ச்சியிலிருந்து செஃப் வெங்கடேஷ் பட் விலகி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சி நடுவராக பங்கேற்றுள்ளார்.
குக் வித் கோமாளியில் இவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்து இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.இதில் கோமாளியாக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கெமி.
இவருக்கு நயன்தாரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.