ப்ரீ புக்கிங்கில் பட்டையைக் கிளப்பியுள்ளது கோட் படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம்,கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்தப் படத்திற்கான டிக்கட்டுகள் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ரீ புக்கிங் படமாக கோட் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.