ஈஸ்வரி குடும்பத்துக்கு எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியன் குடிபோதையில் தடுமாறிய கோபியை தனது வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் ஈஸ்வரி இனி கோபி இங்கதான் இருப்பான் என முடிவெடுத்தார்.

இதனால் ராதிகா அவரது அம்மாவின் பேச்சைக் கேட்டு தனது துணிமணிகளுடன் ஈஸ்வரி வீட்டிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் கோபி நைட்டு என்ன நடந்தது என தெரியாமல் குழம்பி ராதிகா வீட்டுக்கு கிளம்ப ஈஸ்வரி அவனை இங்கேயே இரு என சொல்ல ராதிகா அங்க இருக்கும்போது நான் எப்படி இங்கே இருக்க முடியும் என கோபி சொல்லிவிட்டு கிளம்ப முயற்சி செய்கிறார்.

இந்த நேரத்தில் ராதிகா தனது துணி பேக்கை தூக்கிக்கொண்டு ஈஸ்வரி வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து நீங்க இங்க தான் இருப்பிங்கன்னா உங்க மனைவி என்ற முறையில் நானும் இங்க தான் இருப்பேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ராதிகாவின் இந்த முடிவால் அதிர்ச்சியாகும் பாக்கியா அடுத்து என்ன செய்யப் போகிறார்? கோபி மற்றும் ராதிகாவுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழப்போகிறாரா அல்லது வீட்டை விட்டு வெளியேறப் போகிறாரா என்பதெல்லாம் வரும் நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.