மேகா ஆகாஷிர்க்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் பேட்ட என்ற திரைப்படம் வெளியானது. தெலுங்கு நடிகையான மேகா ஆகாஷ் தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா,யாதும் ஊரே யாவரும் கேளிர், வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் சில வாரங்களுக்கு முன் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்திலும் நடித்திருந்தார்.
அந்த வகையில் பிரபலமான நடிகையாக மாறிய மேகா ஆகாஷிர்க்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதனால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.