Nipah
Henipa Virus : கேரளா, கொச்சி மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கிட்டத்தட்ட 50 மாணவர்களுக்கு நிபா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்தியாவில் உயிர் பலி வாங்கும் நிபா வைரஸால் ஏற்படும் அறிகுறிகளும் அதனை தடுக்கும் முறைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என்பதால் தான் இந்த பதிவை பதிவிடுகிறோம்.

சங்கை நிபா என்ற இடத்தில் இருந்து பரவிய தொடங்கியதால் தான் இந்த வைரஸிற்கு நிபா என பெயரிப்பட்டது. முதலில் மலேசியாவில் இதன் தாக்கம் தொடங்கியது.

பெரும்பாலும் பன்றியுடம் இருந்து பரவும் இந்த வைரஸ், நாய், ஆடு, குதிரை ஆகிய விலங்குகளிடம் இருந்தும் வௌவால்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவ தொடங்குகின்றன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50% முதல் 100% வரை மரணம் நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை தொடுவதாலோ, தும்மல், இருமல் ஆகியவற்றின் மூலமாகவும் மற்ற மனிதர்களுக்கும் பரவுகிறது.

அறிகுறிகள் :

தும்மல், இருமல், தலை சுற்றல், படபடப்பு, கழுத்து வலி, தலை வலி, வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு, சுவாசத்தில் பிரச்சனை, மனக்குழப்பம்,உளறல் ஆகியவை இருக்கும்.

சிகிச்சை :

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ரத்த பரிசோதனை, சுவாச பரிசோதனைகள் மூலமாக இந்த வைரஸ் தாக்கத்தை கண்டு பிடிக்கலாம்.

தடுக்கும் முறைகள் :

வௌவால்கள் சாப்பிட்ட பழங்களை உண்பதை தவிர்க்க வேண்டும். பனம் மரக் கல் , பனம் பழம் ஆகியவைகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

நிபா வைரஸ் தாக்கப்பட்ட பகுதியில் இருந்து இறக்குமதி ஆகும் பழங்கள், காய் கறிகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

காய் கறிகள், பழங்களை நன்றாக கழுவி விட்டது உண்பது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள எதுவாக இருக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.