
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் இணைந்துள்ளார் பிரபல நடிகை.
Hema Sathish Entry in Pandian Stores 2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாவது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியல் ப்ரோமோவில் ஸ்டாலின் மட்டுமே இடம்பெற்று இருந்த நிலையில் முதல் சீசன் நடிகர்கள் யாரும் நடிக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு மீனா இதில் நடிப்பதாக தகவல் பெற அதனை அவர் மறுத்திருந்தார். மேலும் நல்ல விஷயம் நடந்தால் நானே அறிவிப்பேன் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.