தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள ஹூமா குரோஷி தனக்கு பிடித்தது விஜயின் பாடல் தான் என கூறியுள்ளார்.

Hema Qureshi About Favourite Tamil Song : தமிழ் சினிமாவில் அடுத்ததாக அஜித் நடிப்பில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாலிவுட் பட நாயகி ஹூமா குரோஷி நாயகியாக நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல் எது என கேட்டதற்கு எனக்கு பிடித்த தமிழ் பாடல் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் குட்டி ஸ்டோரி பாடல் தான் என கூறியுள்ளார்.

அஜித் மற்றும் ரஜினியுடன் மட்டுமே இணைந்து தமிழ் படங்களில் நடித்துள்ள ஹீமா குரோஷி விஜயின் பாடலை பிடித்த பாடலாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.