Heavy Rainfall In Tamil Nadu
Heavy Rainfall In Tamil Nadu

Heavy Rainfall In Tamil Nadu – சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறியதாவது: ‘தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. கடந்த வாரம் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து உள்ளது.

இந்நிலையில், புதிதாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி ulladhu’ இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக,வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த புயல் இன்று மாலையோ இல்லை நாளை காலையோ தீவிர புயலாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்து உள்ளது.

மேலும் இந்த புயலுக்கு ‘பேய்ட்டி ‘ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றில் இருந்து மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது .

முக்கியமாக, “சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” .

மேலும், பேய்ட்டி புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த புயல் சென்னையை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

மேலும், சென்னைக்கும் விசாகபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.