Heavy Rain
Heavy Rain

Heavy Rain :

சென்னை: வங்கக்கடலில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பலத்த புயலால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் புயல் குறித்து கூறியதாவது:

வங்கக்கடலில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று புயல் உருவாகும் என்றும், அன்று முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதே தினத்தன்று, இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் கூறினார்.

அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற்று 29-இல் புயலாக மாறும் என கூறினார்.

கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பொழிந்து வருகிறது.

எனவே, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் ஆத்தூரில் 10 செ.மீ.,

தேனி பெரியகுளத்தில் 6 செ.மீ., கடலூர், மேட்டூர், ஓசூர், கொடைக்கானல் 6 செ.மீ., ஊத்தங்கரை, காஞ்சிபுரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் ஏப்ரல் 29-ம் தேதி அன்று புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.