Heavy Rain Warning : Tamil nadu, Chennai, India, Heavy Rain Chennai, This has pleased not only motorists but all the residents of Chennai.

Heavy Rain Warning :

புதுடெல்லி: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக அனல்காற்று வீசி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த புயலால் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

மேலும் வடக்கு, தெற்கு வங்கக்கடல், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இது வாகன ஓட்டிகளை மட்டுமின்றி சென்னை வாசிகள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது.

மேலும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் மழை பெய்தது. அனல்காற்று வீசிவந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பாக சென்னை வாசிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.