வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Heavy rain occur at isolated place of tamilnadu – தமிழகத்தில் கடந்த நில நாட்களகாவே லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறார். இந்நிலையில், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கும் வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பது ஏன்? தெரிந்துகொள்ளலாமா?

அதேபோல், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் எனக்கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here