Health Tips of Orange
Health Tips of Orange

Health Tips of Orange :

குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். தெரியுமா, உங்களுக்கு?

குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்று ஆரஞ்சு. ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

சரும ஆரோக்கியமும் பாதிப்பிற்கு உள்ளாகும் அவற்றை சரியாக பராமரிக்க ஆரஞ்சு பழம் உண்பது அவசியமாகும்.

☆ குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதை செயல்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது.

☆ உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர் காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிடவேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும்.

☆ ஆரஞ்சு பழத்தை ஜூஸ் ஆக பருக விரும்புபவர்கள், தோலையும் சேர்த்து ஜூஸாக வேண்டும் அதில் தான் அதிக நார்சத்து இருக்கின்றது.

☆ ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

☆ குளிர் காலத்தில் சளி பிரச்சனை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளித்தொல்லையில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவும்.

☆ தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

☆ ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது.
சிட்ரேட் குறைபாடு இருப்பது தான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here