Foods to avoid when you have a stomach ulcer include
Foods to avoid when you have a stomach ulcer include

அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியில் இருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களை குடல்புண் அல்லது வயிற்றுப் புண் என்கிறோம்.

சாப்பிடவேண்டிய உணவுகள்:

1) வாரத்திற்கு மூன்று முறை தயிரை சாப்பிட்டு வர சிறந்த பலன்களை பெறலாம்.

2) முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

3) வாரத்திற்கு மூன்று முறை திராட்சைப் பழச்சாறு அருந்தலாம். அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில் புதினாவை சேர்த்துக் கொள்வது நல்லது.

4) வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு டம்ளர் அளவிற்கு வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடித்து வரலாம்.

5) மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒரு வகை கீரையை சேர்த்து கொள்வது நல்லது.

6) பாசிப்பருப்பு சேர்த்து கீரை கூட்டு செய்து ஒரு கப் அளவிற்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.

7) முள்ளங்கி புடலங்காய் பூசணிக்காய், தர்பூசணி, இளநீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

8) கல்யாண பூசணிக்காயின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் ஏலக்காய் ஒன்று தேவையான பணங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர அல்சர் நோய் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here