Health Tips
Health Tips

Health Tips : ♠ நாம் பெரும்பாலான நேரங்களில் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் நல கோளாறுகள் உருவாகிறது.

♠ ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

♠ காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது.

இரத்த சோகையா? இவற்றையெல்லாம் சாப்பிடுங்கள், ரத்த சோகையை விரட்டி அடியுங்கள்!!!

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

♠ நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாக செல்கிறது.

♠ மிக முக்கியமான உறுப்புகளாகிய மூளை, கண், காது, கணையம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

♠ சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால்
இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

♠ அதனால் சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்வதனால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவே, அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

♠ வெஸ்டர்ன் வகை கழிவறைகளை தவிர்த்துவிடுங்கள். இந்திய கழிவறையைப் பயன்படுத்துங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here