Health Tips : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Tips :

1) ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் மிகவும் நல்லது.

2) வலுவிழந்த உடலுக்கு தினமும் 2 பேரிச்சை பழம் சாப்பிட்டு, பால் சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்கும்.

3) ஆவாராம் பூ பால் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

4) பப்பாளிப்பழத்தை தினமும் உண்டு வருவதால் உடல் பலவீனம் நீங்கி உடலுக்கு தெம்பு கிடைக்கும்.

5) உடலின் எடை கூடாமல் தடுக்க தேநீரில் எலுமிச்சை பழச்சாறை கலந்து காலை நேரத்தில் குடித்து வர உடலின் எடை கூடாமல் தடுக்கலாம்.

6) வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு கோரி கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கலாம்.

பாத எரிச்சலால் அவதிப்படுபவரா நீங்கள்? பாத எரிச்சல் குணமடைய மிக எளிய சித்தவைத்தியம்.

7) மாதவிடாய் காலங்களில் உடல் சோர்வு குறைய, உடல் பலம் பெற உடல் சோர்வு குறைய கோதுமையை சுத்தம் செய்து கஞ்சி வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம் பெறும்.

8) நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, முளை வெந்தயம் ஆகியவற்றை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.

9) புதினாவை சுத்தம் செய்து காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here