டி ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Health Status of T Rajendhar : தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளோடு வலம் வருபவர் டி ராஜேந்தர். இவர் நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டி ராஜேந்தர் உடல்நிலை நிலவரம் என்ன?? குடும்பத்தார் எடுத்த முடிவு

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதயத்தின் வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல குடும்பத்தார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

டி ராஜேந்தர் உடல்நிலை நிலவரம் என்ன?? குடும்பத்தார் எடுத்த முடிவு

கூடிய விரைவில் நடிகர் சிம்பு தன்னுடைய அப்பாவின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.