Health of Hip Bones - Should hip bones be strong..? | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Health Properties

Health of Hip Bones :

• உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.

எலுமிச்சை இலையை உளுந்தம் பருப்புடன் துவையல் செய்து சாப்பிட்டால் வாய் கசப்பு குறையும். பரு வருவது குறையும். மலச்சிக்கல் நீங்கி பசியெடுக்கும்.

அடிக்கடி வாய்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? வாய்புண் நிரந்தரமாக குணமாக, சில டிப்ஸ்!

• உளுந்து தைலம் உடல் முழுவதும் தடவி அழுத்திப் பிடித்துவிட நரம்பு தளர்ச்சி சரியாகும்.

• ஆண்மை அதிகரிக்க உளுந்தம் பருப்பை எடுத்து அதை சுத்தமான நெய்யில் வறுத்து பின்னர் அதனுடன் பாலை கலந்து நன்றாக கிளறி வேக விட்டு பிறகு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

• உளுந்தை ஊற வைத்த தண்ணீரில் கொடிப்பசலைக் கீரையை சேர்த்து அரைத்து குடித்தால், உடல் சூடு குறையும்.

• சேத்துப் புண் நீங்க உளுந்துமாவில் எலுமிச்சம்பழத்தின் சாறு கலந்து தடவவும்.

• பச்சை வேப்பம் பூ, மிளகாய் வற்றல்,உளுத்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

• உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும்.

• சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது.

• உளுந்து, பார்லி, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் இவை அனைத்தையும் அரைத்து கஞ்சியாக காய்ச்சி குடிக்க வெள்ளைப்படுதல் குறையும்.

• உளுந்தம் பருப்புடன் முடக்கறுத்தான் கீரை கூட்டி துவையல் செய்து உண்ண வாத நோய்கள் குணமாகும். மூட்டுக்கள் வலிமை பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here