Health Benefits of Luffa : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits of Luffa :

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி பீர்க்கங்காய் ஒன்று. பீர்க்கங்காய் சமைத்து உண்பதால் பல நன்மைகள் உண்டாகும்.

ஆரோக்கிய குறிப்புகள்:

1) நீரிழிவு நோயாளிகளுக்கும் உடல் பருமனான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காயாக திகழ்கிறது.

2) கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் எடை குறைய வேண்டுமா? பீர்க்கங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

3) தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி.

4) சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும்.

5) பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து சிறிது நேரம் சூடுபடுத்தி அந்த இலைச்சாற்றை ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

6)சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால் அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

7) பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

8) பீர்க்கன் வேரைக் காய்ச்சி ஆறிய பின் குடித்துவர ரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here