Health Benefits Of Dry Ginger :Health Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

Health Benefits Of Dry Ginger :

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று பெயர் பெற்ற சுக்குவின் மருத்துவ குணங்களை பார்ப்போமா?.

சுக்குவில் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன.

* சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.

* மூட்டு வீக்கம் குறைய சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் பூசி வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.

* சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.

* சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

* தயிர்சாதத்தில், சுக்குப்பொடி போட்டு சாப்பிட வயிற்றுப்புண் குறையும்.

* அதிமதுரத்துடன் சுக்கு சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி குறையும்.

* சிறிதளவு சுக்கை பொடி செய்து வெந்நீருடன் கலந்து குடித்து வர ஜீரணசக்தி அதிகரிக்கும்.

* தோல் நீக்கிய சுக்குத்தூளை எடுத்து அதை நன்கு காய்ச்சிய பாலில் போட்டு இளஞ்சூடாக அருந்தினால் வாயுத் தொல்லைகள் குறையும்.

கோடைக்காலத்தில் வெப்பத்தை நீக்கி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும், நன்னாரி சர்ப்பத்தின் பயன்கள்.

* 5 கிராம் சுக்கு எடுத்து அதனுடன் 10 கிராம் வெல்லம் சேர்த்து அரைத்து உருண்டையாக உருட்டி வாயில் அடக்கிக் கொண்டால் விக்கல் குறையும்.

* வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

* சுக்கை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்

* ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு மெல்ல பல் வலி குறையும்.

* சுக்கை தட்டி தண்ணீர் விட்டு கஷாயம் வைத்து அத்துடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து குடிக்க பசி உண்டாகும்.

* சிறிதளவு சுக்குப் பொடியை தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here