Health Benefits Musk Melon :

கிர்ணி பழங்களில், வைட்டமின் ஏ, ஈ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

▪ கிர்ணி விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாகி முடியின் பளபளப்பும் கூடும்.

▪ கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் குறையும்.

▪ கிர்ணிப்பழத்தின் சதை மற்றும் விதையுடன் சீரகப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிப்பதால் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், சிறுநீர் பெருக்கியாக, சிறுநீர் எரிச்சலை தடுக்கிறது.

▪ பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும்.

எந்த உணவிற்கு எதை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். தெரிந்து கொள்வோமா?..

▪ கிர்ணிப் பழத்தின் சதையைப் பயன்படுத்தி சர்பத் செய்து குடித்து வர உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். கோடை நோய்கள் வராமல் காக்கும்.

*கிர்ணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து
வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

* கிர்ணிப்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ் இரண் டையும் சம அளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here