Health Benefits for Lemon : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits for Lemon :

🍋 எலுமிச்சை பழத்தின் சாற்றை போலவே எலுமிச்சைப்பழ தோலிலும் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவற்றை அறிந்து கொள்வோம்.

🍋 இரவு உறங்க செல்லும் முன் எலுமிச்சம்பழத்தில் பாதியை முகத்தில் தடவிக் கொண்டு காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக அழகுடன் இருக்கும்.

🍋 எலுமிச்சைத் தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாகும்.

உங்களுக்கு பயனுள்ள சில வீட்டு மட்டும் ஆரோக்கிய குறிப்புகள். தெரிந்து கொள்வோமா?

🍋 எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளைத் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

🍋 நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பின் எலுமிச்சை தோலை நகங்களின் மீது தேய்த்து கழுவி விட வேண்டும். இதனால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

🍋 எலுமிச்சை பழத்தோலுடன் உப்பை சேர்த்து காயவைத்து பவுடர் ஆக்கி பல்துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here