Health Benefits For Herbal Tea : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits For Herbal Tea :

1) துளசி இலை டீ தயாரிக்க:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் இந்த துளசி டீயை போட்டு குடித்தால் இதமாக இருக்கும்.

2) செம்பருத்தி டீ தயாரிக்க:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

செம்பருத்திப்பூக்கள் வெறும் இதய நோய் என்றில்லாமல், அவர்களுக்கு வரக்கூடிய படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு, மாதவிடாய்க் கோளாறு பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் தரக்கூடியது.

3) ஆவாரம்பூ டீ தயாரிக்க:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு, வெல்லம் கலந்து டீ சாப்பிட்டால், உடலின் வெப்பத்தை தணிக்கும்.

4) கொய்யா இலை டீ தயாரிக்க:

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here