Head Pain
Head Pain

Head Pain : ஒற்றைத் தலைவலி,சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! பற்றி தெரிந்து கொள்வோமா?.

☆ உணவுமுறை, பணிச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் `மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி வருகிறது. தலையே வெடித்துவிடும் அளவுக்கு மிக மோசமான இந்த வலி எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது.

மைக்ரேன் பிரச்னையை சில உணவுகள் அதிகரிக்கும்.

☆ தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* சாக்லேட், வாழைப்பழம், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் தயிர் சார்ந்த பொருள்கள், வெங்காயம், தக்காளி, சீஸ் வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள்.

* வேர்க்கடலை, சுத்திகரிக்கப்பட்ட கோதுமை, அதிக கொழுப்புச்சத்துள்ள அசைவ உணவுகள், அளவுக்கதிகமான டீ, காபி போன்றவை மைக்ரேன் பிரச்னையை அதிகரிக்கும்.

* ஒவ்வொருமுறை `மைக்ரேன்’ தலைவலி ஏற்படும்போதும், என்ன உணவு உட்கொண்டோம் என்பதைப் பரிசோதித்து, அடுத்தடுத்த நாள்களில் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

☆ சாப்பிட வேண்டிய உணவுகள்:

* இளநீர், நுங்கு, நீர்மோர், பானகம் போன்றவற்றை சாப்பிடலாம்.  ஒமேகா 3 வகை கடல் உணவுகள் ஒற்றை தலைவலி வராமல் காக்கும்.

* அதிக தானிய உணவுகளை எடுத்துக் கொண்டால், தலைவலி வராது. முழுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நட்ஸ், இஞ்சி, பால், ஆளி விதை, புருக்கோலி ஆகியவற்றை அதிகம் சாப்பிடவேண்டும்.

* தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். அதேபோல், மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் தினமும் யோகா மற்றும் தியானம் செய்யவேண்டும்.

☆ மேற்சொன்னவாறு வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு, மைக்ரேன் வலியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்து வந்தால் பிரச்னைகளை எளிதாகத் தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here