HBD Chiyaan Vikram 
HBD Chiyaan Vikram 

HBD Chiyaan Vikram  :விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ஸ்கெட்ச் படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான அப்படம் இன்னும்முடிந்தபாடில்லை.

இந்த சமயத்தில் விக்ரம் பெரிதும் எதிர்பார்ப்பது கடாரம் கொண்டான் படத்தைத்தான். கமல் தயாரிப்பில் அவரது உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்கும் இப்படம் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

இந்த ஸ்பெஷல் நாளில் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த வீடியோ செம விருந்தாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதைதொடர்ந்து ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாம். இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.