HBD Ajith

HBD Ajith : தன்னம்பிக்கையின் மறு உருவமான தல அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

10-ம் வகுப்பை பாதிலேயே விட்டு விட்டு மெக்கானிக்காக, பைக் ரேஸராக தன்னுடைய பயணத்தை தொடங்கி அதன் பின்னர் மாடலிங் நடிகராக சினிமாவிற்கு நுழைந்தவர் தல அஜித்.

அதன் பின்னர் அமராவதி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்து இருப்பவர்.

ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?

தனக்காக தன்னுடைய ரசிகர்கள் நேரத்தை செலவிட கூடாத என்பதற்காகவே ரசிகர் மன்றங்களையும் கலைத்தவர்.

இருப்பினும் ஒரு போதும் இவரது ரசிகர்கள் கலைந்ததில்லை. நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் வருகின்றனர்.

தன்னுடைய உடலில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தாலும் ஒரு போதும் தன்னுடைய தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் கை விடாமல் வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தல அஜித்திற்காக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளையதள பக்கங்களில் #HappyBirthdayThala #HBDThala என பல வித ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.