Hayden warning
Hayden warning

Hayden warning – ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷ்ப் பந்த்-ஐ பார்த்து என் குழந்தைகளுக்கு ‘பேபிசிட்டர்’ஆக இருக்கிறாயா? என்று கேட்டார்.

அதனை தொடர்ந்து ரிஷப் பந்தும் ஆஸ்திரேலிய பிரதமர் அளித்த விருந்தில் கலந்து கொண்டபோது, டிம் பெய்னின் குழந்தையை எடுத்து கொஞ்சினார்.

அந்த சம்பவத்தை டிம் பெய்ன், ரிஷப் பந்த் சிறந்த ‘பேபி சிட்டர்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் டுவீட் செய்திருந்தார். இந்த நிகழ்வு அந்தத் தொடர் முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ‘பேபிசிட்டிங்’ விளம்பர படத்தில் நடித்தார்.

அதில் நடித்த சேவாக் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவர்கள் எங்களிடம் பேபிசிட்டராக இருக்க முடியுமா?’’ என்று கேட்டார்கள்.

நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாங்க.. நீங்கள் சொல்வதை செய்கிறோம்’’ என்று உறுதியளிப்பதுபோல் கூறுகிறார்.

அந்த விளம்பரத்தை பார்த்து தனது ட்விட்டரில் ஹெய்டன் பதிவிட்டுள்ள செய்தி : ‘‘எச்சரிக்கிறேன்… ஆஸ்திரேலியா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா.

உலகக்கோப்பை போட்டியின்போது யார் பேபி சிட்டர்-ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்’’ என்று பதில் கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரம் தற்போது பெரிதாக அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here