
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது மனைவி, மகன், மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதனை அடுத்து ’காக்க காக்க’ ’சாமி’ ’அன்னியன்’ ’வேட்டையாடு விளையாடு’ உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார் என்பதும் அவர் இசையமைத்த பல திரைப்படங்கள் பாடல்களுக்காக சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விஜய் நடித்த ’துப்பாக்கி’ திரைப்படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் அதேபோல் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெருமளவு பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், சுமா ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்ற மகனும், நிகிதா என்ற மகளும் உள்ளனர். மகள் நிகிதா ஒரு பின்னணி பாடகி என்பதும், சூர்யா நடித்த ’காப்பான்’ திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.





