Harish Kalyan in Arjun Reddy Gettup

அர்ஜுன் ரெட்டி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.

Harish Kalyan in Arjun Reddy Gettup : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். வளர்ந்து வரும் நடிகரான இவர் அமலாபால் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த ஹரிஷ் கல்யாண் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து ஹீரோவாக அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அச்சு அசலாக அப்படியே அர்ஜுன் ரெட்டி கெட்டப்பில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.