Hari Upset on Suriya's Decision
Hari Upset on Suriya's Decision

நடிகர் சூர்யா அருவா படத்தை தள்ளி போட்டதால் இயக்குனர் ஹரி வேறு ஒரு நடிகருடன் கூட்டணி அமைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hari Upset on Suriya’s Decision : தமிழ் சினிமாவில முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. பல நடிகர்களை வைத்து ஹிட்டான படங்களை இயக்கியுள்ள இவர் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

சமீப காலமாக நல்ல ஒரு வெற்றியைக் கொடுக்க போராடி வரும் சூர்யா ஹரி படம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அருவா படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் தற்போது வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டதால் ஹரி தரப்பு அப்செட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் படத்துக்கே இத்தனை கோடிகளா?? மிரள வைக்கும் தளபதி விஜய் மகனின் சம்பளம் – மாஸ்டர் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

இதனால் இயக்குனர் ஹரி தன் மனைவியின் சகோதரரான அருண் விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரியும்‌.

ஊரடங்கால் சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை முடித்து விட்டு ஹரியின் அருவா படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது.