Hari Suriya Movie
ஹரி சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் கமிட்டாகியுள்ள உள்ள நிலையில் அவர் ஹீரோயின் இல்லை என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா சூரரை போற்று படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள ஹரி சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது சூர்யாவுக்கு ஜோடி மாளவிகா மோகனன் இல்லை, தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ராஷ்மிகா ஏற்கனவே தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்த்தான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.